கணவனை ஊனமாக்க மனைவி போட்ட மாஸ்டர் பிளான்

x

மதுரையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படை ஏவி ஊனமாக்க முயன்ற மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பாலை ஜி.ஆர்.நகரை சேர்ந்த தம்பதி செந்தில்குமார் மற்றும் வைஷ்ணவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார், வருடத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

இதன்படி மதுரைக்கு வந்த செந்தில்குமார், தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பும் போது மர்மநபர்கள் 2 பேர் வழிமறித்து சரமரியாக வெட்டியுள்ளனர்.

இந்நிலையில், செந்தில்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வழக்கை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் மனைவியின் செல்போனை வாங்கி சோதனை நடத்தினர்.

அப்போது, வைஷ்ணவிக்கும் அவரின் உறவினர் வெங்கடேசன் என்பவருக்கும் தகாத உறவு இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியின் தகாத உறவிற்கு கணவர் இடையூறாக இருப்பதாக கூறி கூலிப்படையை ஏவி ஊனாமாக்க முயன்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், செந்தில்குமாரை வெட்டிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்