புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்க கோரும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது

x

புதுச்சேரியில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக எம் எல் ஏக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் அவர்களை தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்