பள்ளி மாணவர்கள் மது அருந்துவதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்? ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம்

x

பள்ளி மாணவர்கள் மது அருந்துவதற்கும், ரகளை செய்வதற்கும் தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.மது கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு தடை விதிக்ககோரி, அமைச்சர் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராம‌மூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த‌ போது, தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கஞ்சா , குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்காக எப்படி குறை சொல்ல முடியும்? என்றும், அவர் முதலமைச்சரோ, உள்துறை அமைச்சரோ அல்ல என்றும் செந்தில் பாலாஜி தரப்பு வாதிடப்பட்டது. பள்ளி மாணவர்கள் மது அருந்துவதற்கும், ரகளை செய்வதற்கும் எப்படி பொறுப்பேற்க முடியும் என்றும் கேள்வி எழுப்ப‌ப்பட்டது. அதே நேரத்தில் வாதங்கள் நிறைவடையாததால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்