அசுர வேகத்தில் வந்த லாரி இடித்ததில் இடிந்து விழுந்த தமிழக எல்லை நுழைவு வாயில் - பரபரப்பு சம்பவம்

x

ஓசூர் அருகே லாரி மோதியதில், கர்நாடக எல்லை நுழைவு வாயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது.

ஓசூரை அடுத்த அத்திப்பள்ளி கிராமம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில், கர்நாடகாவை வரவேற்கும் விதமாக நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு அந்த வழியாக சென்ற லாரி மோதியதில், அந்த நுழைவு வாயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதையடுத்து, அங்கு திரண்ட பல்வேறு கன்னட அமைப்பினர், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழமையான அந்த நுழைவு வாயிலை அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து வந்த அத்திப்பள்ளி போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்