நடுரோட்டில் சரிந்து விழுந்த திருமணத்துக்கு சென்ற சாரட் வண்டி குதிரைகள் - அதிர்ச்சி காட்சிகள்

x

சென்னையில், சாரட் வண்டியில் பூட்டிய இரட்டை குதிரைகள், திடீரென்று சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியொன்றில், இரட்டைக் குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டி பயன்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்த பின், சாரட் வண்டி அண்ணாசாலை சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த போது, திடீரென நிலைதடுமாறிய குதிரைகள் அங்கேயே சரிந்து விழுந்தன.

உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், சுமார் அரை மணி நேரம் போராடி, இரண்டு குதிரைகளையும் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்