Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-12-2022) | Morning Headlines | Thanthi TV

x

இன்று நடைபெறுகிறது, குஜராத், ஹிமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை...

ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது பிற்பகலில் தெரிய வரும் என்று எதிர்பார்ப்பு...


டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி....

134 வார்டுகளில் ஆம் ஆத்மியும், 104 வார்டுகளில் பாஜகவும் வெற்றி... 10 இடங்களை மட்டுமே பெற்றது காங்கிரஸ்...


சென்னையில் இன்று நடைபெறுகிறது, பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்...

பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், மாவட்டத்தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தகவல்...


வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நள்ளிரவில், "Man-Dous" மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது...

வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...


தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதாக அறிவிப்பு...


இந்தியாவை சாய்த்து தொடரை வென்றது வங்கதேசம்...

2வது ஒருநாள் போட்டியில் 5 ரன்களில் இந்தியா தோல்வி...


Next Story

மேலும் செய்திகள்