ராகங்களுக்கு நோய்களை குணப்படுத்தும் தன்மை உண்டு" - ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு

x

மனிதர்களின் நோய்களை ராகங்கள் குணப்படுத்தும் என, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் நடத்தும் சமுதாயா அறக்கட்டளை சார்பில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். விழாவில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், இசை சேவையாற்றி வரும் சுதா ரகுநாதன், இது வரை 6 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு மக்களுக்கு தொண்டு செய்து இருப்பது பாராட்டுக்குரியது என்றார். தொடர்ந்து பேசிய அவர், ராகங்களுக்கு நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்