மேற்கு வங்க ஆளுநராக சி.வி. ஆனந்த போஸ் நியமனம்
மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக சிவி ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன், மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த நிலையில், அம்மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆனந்த போஸை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது மேகாலயா அரசின் ஆலோசகராக உள்ள ஆனந்த போஸ், பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷங்கள் தொடர்பான உச்ச நீதிமன்றக் குழுவின் தலைவராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story