பிறந்தநாள் கொண்டாடிய டைகர் - வாரி அணைத்து முத்தம் தந்த அதிகாரி

x

நீலகிரி மாவட்டத்தில் வனக் குற்றங்களை கண்டுபிடிக்கும் மோப்பநாய் டைகரின் இரண்டாவது பிறந்தநாளை வனத்துறையினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த இந்த நாய் இதுவரை 13 வனக் குற்றங்களை கண்டுபிடித்துள்ளது.

ஆறு மாத குட்டியாக முதுமலைக்கு கொண்டுவரப்பட்ட டைகரின் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் மற்றும் வன அதிகாரிகள் முன்னிலையில் முதுமலை உதவி கள இயக்குனர் திவ்யா, கேக் வெட்டி டைகருக்கு ஊட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்