காந்தியின் ஆடை புரட்சி ...100 ஆண்டுகள் நிறைவு -நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

x

காந்தியின் ஆடை புரட்சி ...100 ஆண்டுகள் நிறைவு -நூற்றாண்டு விழா கொண்டாட்டம்


மகாத்மா காந்தி 1921ஆம் ஆண்டில் தனது மேலாடையை துறந்து சாதாரண ஆடைக்கு மாறிய ஆடை புரட்சி நிகழ்வு மதுரையில் நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

மேல்நாட்டில் சட்டப்படிப்பு பயின்ற காந்தி, கோட்-சூட் உடைகளை அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். 1921ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுரைக்கு வந்த அவர், மேல்சட்டையை துறந்து இடுப்பில் வேட்டி, தோளில் துண்டு என தனது ஆடை பழக்கத்தை மாற்றிக்கொண்டார். 1921-ல் மதுரைக்கு ரயிலில் வந்தபோது சோழவந்தான் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு விவசாயியை ஜன்னல் வழியாக காந்தி பார்த்தார். இதையடுத்து, தானும் நாட்டின் சாதாரண மக்களை போல் இருக்க வேண்டுமென தனது ஆடை பழக்கத்தை மாற்றிக் கொண்டார். இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் மதுரை காந்தி அருங்காட்சியகம் சார்பிலும் பிற சமூக நல அமைப்புகள் சார்பிலும் நடை பேரணி உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்