லஞ்ச வழக்கில் கைதான முன்னாள் சீன சட்ட அமைச்சருக்கு ஆயுள் தண்டனை

x

சீனாவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சருக்கு லஞ்ச வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகம் செய்து லஞ்சம் வாங்கிய வழக்கில் சீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஃபூ ஜெங்குவாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஃபூ ஜெங்குவா தொழில் நிறுவனங்களுக்கு உதவ லஞ்சம் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை கடந்த ஜூலை மாதம் துவங்கிய நிலையில், இறுதி விசாரணையில் ஃபூ குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தொடர்ந்து ஃபூ ஜெங்குவா தண்டனையைக் குறைக்கும்படி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்