கிராம மக்களுக்கு கரச்சல் கொடுத்த கரடி - கூண்டு வைத்து கொத்தாக தூக்கிய வனத்துறையினர்

x

கிராம மக்களுக்கு கரச்சல் கொடுத்த கரடி - கூண்டு வைத்து கொத்தாக தூக்கிய வனத்துறையினர்


நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கிராம மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு கோட்டத்திற்கு உட்பட்ட புலவன் குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு வாரம் காலமாக கிராம மக்களுக்கு கரடி ஒன்று தொல்லை கொடுத்து வந்தது. இந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, புலவன் குடியிருப்பு கிராமத்தில் கூண்டு வைக்கப்பட்ட நிலையில், அதில் காலையில் கரடி சிக்கியது. தொடர்ந்து, கரடியை வனப்பகுதிக்குள் கொண்டு விடும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்