கோவையை தொடர்ந்து ஈரோட்டிலும் பரபரப்பு -பாஜக நிர்வாகி கடையில் டீசல் பாக்கெட் வீச்சு!

x

ஈரோட்டில், பாஜக நிர்வாகியின் கடையில் டீசல் பாக்கெட்கள் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி தட்சிணாமூர்த்தி என்பவரது பர்னிச்சர் கடையில், மர்ம நபர்கள் 4 டீசல் பாக்கெட்டுகளை வீசியுள்ளனர். இன்று காலை வழக்கம்போல் கடையை திறந்து பார்த்தபோது, ஒரு டீசல் பாக்கெட், கடையின் ஜன்னல் அருகே தீ பிடித்து எரிந்த நிலையில் இருந்தது.

மற்ற 3 டீசல் பாக்கெட்டுகள் எரியாமல் கிடந்தது. இதனால் கடையில் இருந்த பொருட்கள் தீக்கிரை ஆகாமல் தப்பின.

தகவலின் பேரில் வந்த போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்