வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - கால்நடைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்

x

கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், சிதம்பரம் அருகே வீரன்கோவில்திட்டு, மேல திருக்கழிப்பாலை, கீழ திருக்கழிப்பாலை, சின்னகாரமேடு, பெரிய காரமேடு உள்ளிட்ட கரையோர கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கால்நடைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். அந்தப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர்கள், ஆண்டுதோறும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க ஆற்றின் கரைகளில் தடுப்புச் சுவர்கள் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்