முதல் ஒருநாள் போட்டி.. நியூசி.க்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா

x

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 306 ரன்கள் குவித்து உள்ளது.

ஆக்லாந்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தவான், சுப்மன் கில் ஜோடி நேர்த்தியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தது. கில் 50 ரன்னுக்கும், தவான் 72 ரன்னுக்கும் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் சொற்ப ரன்னுக்கு வெளியேறினர்.

எனினும் ஷ்ரேயாஸ் ஐயர் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்து ஆடிய சஞ்சு சாம்சன் 36 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவர்களில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சிக்சர்களைப் பறக்கவிட்டார்.

ஷ்ரேயாஸ் ஐயர் 80 ரன்னுக்கு அவுட் ஆக, அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 16 பந்தில் 37 ரன் அடித்தார். இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது.

307 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து தற்போது ஆடி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்