திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி-"ஒரே மாவட்டத்திற்கு இருவர் வேட்புமனு தாக்கல்"

x

மாவட்ட செயலாளர், அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்மனு தாக்கல் நேற்று காலை முதல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் நாளான நேற்று தென் மாவட்டங்களான கன்னியாகுமரி,தூத்துக்குடி,தேனி, மதுரை, உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இன்று 2 வது நாளாக கோவை, நீலகிரி, தருமபுரி, திருச்சி உள்ளிட்ட 21 மாவட்ட நிர்வாகிகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள ஒரு மாவட்ட செயலாளர் பதவிக்கு இருவர், அல்லது அதற்கு மேலானோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

நிர்வாகிகளை சுமூகமாக தேர்வு செய்யும் வகையில், ஒரே மாவட்டத்தில் கூடுதலாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்