விபத்தில் இறந்த டாக்டர் குடும்பத்தினர் இழப்பீடு கோரி வழக்கு - 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு

x

தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர், விபத்தில் இறந்ததாக இழப்பீடு கோரிய அவரது குடும்பத்தினருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் பாபு, டாக்டராக பணியாற்றி வந்தார். இவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், சந்தோஷின் குடும்பத்தினர், அவரது இழப்புக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்கள் இழப்பீடு பெற வேண்டி தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து, மனுதாரர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்