வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகள் - நகை மதிப்பீட்டாளர் செய்த அதிர்ச்சி சம்பவம்

x

ஒசூரில் வாடிக்கையாளர்கள் பெயரில் வங்கியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து நகை மதிப்பீட்டாளர் 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் மத்திகிரி கூட்ரோடு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில், வடமலம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவர் வங்கி வாடிக்கையாளர்களான கலையரசி, புனிதவள்ளி, நாகராஜ், விஜயலட்சுமி, பாக்கியவதி ஆகியோரது பெயர்களில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்து 21 லட்சம் ரூபாய் சுருட்டியதாக தெரிகிறது.

இதையறிந்த வங்கி நிர்வாகம், போலி தங்க நகைகளை அடகுவைத்ததாக வாடிக்கையாளர்கள் 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வங்கி மேலாளரிடமும், பின்னர் ஒசூர் மத்திகிரி காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர்.

விசாரணையில் நகை மதிப்பீட்டாளர் வெங்கடேசன் மோசடி செய்தது தெரியவந்தது. வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்