திமுக கவுன்சிலரின் மண்டையை உடைத்த முன்னாள் பாமக நிர்வாகி - தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகிக்கும் அடி, உதை

திட்டக்குடி அருகே காரை வழிமறித்து திமுக கவுன்சிலர் மற்றும் அதிமுக நிர்வாகியை முன்னாள் பாமக நிர்வாகி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
x

ஆலம்பாடியை சேர்ந்த திமுக கவுன்சிலர் சங்கரும், அதிமுக கிளை செயலாளர் செல்வராஜூம், கொரக்கையில் காதனி விழாவுக்கு சென்றனர். அங்கு முன்னாள் பாமக ஒன்றிய செயலாளர் கண்ண‌னுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் காரில் புறப்பட்டு சென்ற போது, அவர்களை வழிமறித்த கண்ணன் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்