"மதுப்பிரியர்கள் நலனுக்காக சட்டப்பேரவையில் குரல் எழுப்புவேன்" - இடைத்தேர்தலில் மதுப்பிரியர் போட்டி

x

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், சுயேட்சையாக போட்டியிடும் மதுப்பிரியர் ஒருவர், பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடையிலிருந்து வினோதமான முறையில் பரபரப்புரை தொடங்கினார்.

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் என்பவர், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகிறார். பேருந்து நிலையம் அருகே, டாஸ்மாக் மதுபான கடையிலிருந்து பரப்புரையை தொடங்கிய அவர், ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும், மதுபானத்துக்கு 10 ரூபாய் வீதம் அதிகமாக வசூல் செய்வதாகவும், இதற்கு சட்டப்பேரவையில் எந்த உறுப்பினர்களும் குரல் எழுப்புவது இல்லை எனவும் குற்றஞ்சாட்டினார். டாஸ்மாக் கடைகளின் முன்பு கிடக்கும் காலி பாட்டில்களை சேகரித்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் டெபாசிட் செலுத்தி தேர்தலில் போட்டியிடுவதாகவும், மதுப் பிரியர்களின் நலனுக்காக சட்டப்பேரவைியல் குரல் எழுப்புவேன் எனவும் ஆறுமுகம் கூறினார். மேலும்,

அரசுக்கு அதிமான வருவாயை தருபவர்கள் மதுப்பிரியர்கள் எனவும் குறிப்பிட்டார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், அரசியல் கட்சியினர்களே வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், மதுப்பிரியர் ஆறுமுகம் சுயேட்சையாக களமிறங்கியது, அப்பகுதி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்