"மேயராகவும் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோதும் எதுவும் செய்யாதவர்"முதல்வர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் பதில்

x

"மேயராகவும் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோதும் எதுவும் செய்யாதவர்"முதல்வர் ஸ்டாலினுக்கு ஈ.பி.எஸ் பதில்

சென்னை மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தபோது எதையும் செய்யாத தற்போதைய முதல்வர் ஸ்டாலின் முந்தைய அதிமுக அரசை குறைசொல்வது சரியல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இனியும் எதற்கெடுத்தாலும் அதிமுக அரசின் மீது குற்றம் சொல்லி பிரச்சனைகளை திசை திருப்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை மேயராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பும் கிள்ளிப்போடவில்லை என்றும், அதிமுக அரசை குறைகூறாமல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் அனைத்து மக்களையும் காக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்