வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை - குடும்பத்தினருடன் மறியலில் ஈடுபட்ட தனிநபர்

x

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே, ஒருவர் தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க கோரி, குடும்பத்தினருடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

டி.மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச வீட்டு மனையில் வீடு கட்டி வசித்து வருகிறார்.

இவர் தனது வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலரை அணுகியபோது, அவர் அலைக்கழிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்தினருடன் தண்டாரம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்