"நேஷனல் ஹெரால்டு" வழக்கு - சோனியா, ராகுலுக்கு சம்மன்

"நேஷனல் ஹெரால்டு" வழக்கு - சோனியா, ராகுலுக்கு சம்மன்
x

"நேஷனல் ஹெரால்டு" வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி 'நே‌ஷனல் ஹெரால்டு' பத்திரிகை தொடர்பாக டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திர்ந்தார். அதில், 'நே‌ஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் பல கோடி ரூபாய் சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தில் அதை காங்கிரஸ் விலைக்கு வாங்கியதாகவும், இதில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் முறைகேடாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சி பி ஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மோதிலால் வோரா, ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பூபேந்தர்சிங் கோடா ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது.சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் குமார் பன்சால் உள்ளிட்டோரை அமலாக்கத் துறையினர் அண்மையில் விசாரித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்