2 ஆண்டுகளுக்கு பிறகு தசரா திருவிழா..செப். 26ம் தேதி கொடியேற்றம்..மாலை அணிய கோயிலுக்கு வந்த பக்தர்கள்

x

மைசூருக்கு அடுத்தப்படியாக வெகு விமர்சியாக நடைபெறும் குலசை தசரா திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழா அடுத்த மாதம் 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் வருகின்ற அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், காளி, முருகன், விநாயகர், அனுமான் என பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், இன்று கோயில் வந்து மாலை அணிவித்து கொண்டு, தங்கள் விரதத்தை தொடங்கினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி தசரா திருவிழா நடைபெற்ற நிலையில், இம்முறை மீண்டும் வழக்கம் போல் தசரா விழா நடைபெற இருப்பதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்