அனுமதியின்றி ஏழுமலையான் கோயில் மேல் பறந்த ட்ரோன்- வீடியோ எடுத்த நபர் யார்?

x

அனுமதியின்றி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேல் ட்ரோன் கேமராவைப் பறக்க விட்டு கோயில் முழுவதையும் வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ட்ரோன் மூலம் கேமராவில் வீடியோவை எடுத்த நபர் ஒருவர் ஐகான் என்ற பெயரிலான அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது பற்றி தெரிய வந்த தேவஸ்தான நிர்வாகம் போலீசில் அளித்துள்ள புகாரின் பேரில், போலீசார் திருப்பதி மலை மீது ட்ரோனை பறக்கவிட்டு வீடியோ எடுத்த நபர் யார், எதற்காக அப்படி செய்தார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த காட்சி ஆய்வுக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.


கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் திருப்பதி மலையில் இது போன்ற சம்பவம் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தேவஸ்தான தலைமை கண்காணிப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் தெரிவித்துள்ளார். கோயிலைப் படம் பிடித்தது உண்மை என கண்டறியப்பட்டால் அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான வேணுகோபால தீட்சதர், தெய்வ சக்தியின் மீது இது போன்ற இயந்திர சக்திகள் பறப்பது தடுக்கப்பட வேண்டிய செயல் என்று தெரிவித்ததுடன், ஏழுமலையான் கோவில் மீது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திருமலையின் மீதும் விமானங்கள் பறக்க தடை விதிக்கு தேவையான நடவடிக்கைகளை தேவஸ்தான அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்