பெண்களுக்கான ஓட்டுனர் உரிம திட்டம்... | மூடு விழா நடத்திய அதிகாரிகள்

x

புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று முதல் சட்டசபைக் கூட்டத்தொடரில், போக்குவரத்து துறை அலுவலகங்களில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பெண்களுக்கு மட்டும் ஓட்டுனர் உரிமம் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும் என்ற திட்டத்தை அறிவித்தார். இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை தோறும் பெண்களுக்கு மட்டும் ஓட்டுனர் உரிமம் வழங்கும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று நிலையில் கூட்ட நெரிசல் இன்றி பலர் பயன்பெற்று வந்தனர். ஆனால் செயல்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே சனிக்கிழமை சிறப்பு முகாமிற்கு அதிகாரிகள் மூடு விழா நடத்தி உள்ளனர். இது பெண்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து முறையான அறிவிப்பு இல்லாததால் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்த திட்டம் சொந்த மாவட்டத்திலேயே அதிகாரிகள் முடக்கி இருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனவே மீண்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பெண்களும் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்