சென்னையில் நாய்கள் கண்காட்சி

x

சென்னை அடையாறில் பல்வேறு இன நாய்கள் பங்கேற்றுள்ள நாய்கள் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை, அடையாறில் உள்ள குமார ராணி முத்தையா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில், தி மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியில் தமிழகத்தை சேர்ந்த ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை போன்ற நாய் இனங்கள் மட்டுமின்றி, ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர் மேன் போன்ற 68 இனங்களைச் சேர்ந்த 570 வெளிநாட்டு நாய்களும் பங்கேற்றுள்ளன.

விதவிதமான நாய்கள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில், நாய்களுக்கு 14 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த நாய்கள் கண்காட்சி இன்றுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்