திமுகவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் போட்டியின்றி தேர்வாவார்கள் என தகவல்

x

திமுகவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் போட்டியின்றி தேர்வாவார்கள் என தகவல்

திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் தேதி ஒரு சில நாட்களில் வெளியாகவுள்ளது.

திமுகவில் உட்கட்சி தேர்தல் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் தேதியை திமுக தலைமை ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்ற பிறகு, போட்டியிருந்தால் அக்டோபர் 9 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள பொதுக்குழுவில் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. அதே சமயம், திமுக தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின், பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வாவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்