திமுக உட்கட்சி பொதுத்தேர்தல்.. கடும் போட்டி - நிர்வாகிகளுக்கு எதிராக குவியும் மனுக்கள்

x

திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு, தற்போதைய நிர்வாகிகளுக்கு எதிராக ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுகவின் 15 வது உட்கட்சி பொதுத்தேர்தலையொட்டி, மாவட்டச் செயலாளர், அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில், குமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், சக்கரபாணி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர், ஏற்கனவே வகிக்கும் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு போட்டியிட வேட்புமனுக்களை அளித்தனர். இதில், தூத்துக்குடி, விருதுநகர் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தற்போதைய மாவட்டச் செயலாளர்களை எதிர்த்து போட்டியிட, ஏராளமான நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்