திமுக-வின் கொடி கம்பம் சர்ச்சை...உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட் - அகற்றப்பட்ட திமுக கொடி

x

சென்னை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வைக்கப்பட்ட திமுக கொடி கம்பம், வேறு இடத்தில் மாற்றி அமைக்கப்படும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது பிறந்த நாளையொட்டி, கடந்த 27-ம் தேதி,சென்னை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திமுக கொடியேற்றப்பட்டது.

இந்த நிலையில், கொடி கம்பம் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் கட்சித் தலைவர் கொடியை வைக்க எங்கள் நடைபாதை தான் கிடைத்ததா?, இதற்கு சென்னை காவல்துறை எந்த சட்டப்படி அனுமதி அளித்தார்கள் என்று அறப்போர் இயக்கம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் கொடி கம்பம் வேறு இடத்தில் அமைக்கப்படும் என்று உதயநிதி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்