நடுரோட்டில் பஸ்ஸை நிறுத்தி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய திமுக சேர்மன் - தீயாய் பரவும் வீடியோ

x

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் பேரூராட்சி திமுக சேர்மனின் பிறந்தநாள் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்தி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூர் பேரூராட்சி சேர்மேனாக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த அன்பழகன். இவர் தமது பிறந்த நாளை 100 பேருடன் கொண்டாட முடிவு செய்தார். பின்னர், சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் புத்தர கவுண்டம்பாளையம் மெயின் ரோட்டில் போக்குவரத்தை நிறுத்தி பட்டாசுகள் அதிர்வேட்டுகள் முழங்க, பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அந்த வழியாக வந்த பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்