சதுரகிரி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கீழே இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்

x

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பெய்த கனமழையால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சதுரகிரி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கீழே இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் 4,500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் செல்வது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு, கடந்த 25 ஆம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை 6 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று பெய்த கனமழை காரணமாக கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, கருப்பசாமி கோயில் ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோயிலுக்கு சென்ற பக்தர்கள் கீழே இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு, மலைப்பகுதியிலேயே அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்