சென்னையில் பட்டப்பகலில் பரபரப்பு -ரயிலில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல்...

x

கடந்த 2020ம் ஆண்டு சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த அப்பன்ராஜ் என்பவர், கொலை செய்யப்பட்ட வழக்கிற்காக ரவீஸ்வரன் மற்றும் அவரது தந்தை வேலுச்சாமி ஆகியோர் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகி உள்ளனர். பின்னர் இருவரும் பீச்சில் இருந்து திருவான்மியூர் நோக்கி செல்லும் ரயிலில் பயணித்துள்ளனர். அப்போது அவர்களை வழிமறித்த மர்ம நபர்கள், பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்திருந்த ரவீஸ்வரனை மீட்டனர். இதுகுறித்து எழும்பூர் இருப்பு பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்