டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்... சாம்பியன் பட்டம் வென்றது கனடா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் முதல் முறையாக கனடா சாம்பியன் பட்டம் வென்று உள்ளது.
x

ஸ்பெயினின் மலாகா நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் கனடா மோதியது. இதில் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் கனடா வீரர் ஷாபோவலோவ், ஆஸ்திரேலிய வீரர் தனாசியை 6க்கு 2, 6க்கு 4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் கனடா இளம் வீரர் ஃபெலிக்ஸ், அலெக்ஸ் டிமினாரை 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம், 2க்கு பூஜ்யம் என்ற கேம் கணக்கில் வென்ற கனடா, முதல் முறையாக டேவிஸ் கோப்பையையும் முத்தமிட்டது.


Next Story

மேலும் செய்திகள்