பேருந்து படியில் ஆபத்தான பயணம் - நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர் - ஓட்டுநர், நடத்துநருடன் மாணவர்கள் வாக்குவாதம்

x

பேருந்து படியில் ஆபத்தான பயணம் - நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர் - ஓட்டுநர், நடத்துநருடன் மாணவர்கள் வாக்குவாதம்


பொன்னேரி அருகே அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணித்ததால் ஓட்டுநர் பேருந்தை நடுவழியில் நிறுத்தி உள்ளார். படியில் பயணித்தால் பேருந்தை இயக்க முடியாது என கூறிய ஓட்டுநர், நடத்துனரிடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, குறித்த நேரத்தில் போதுமான பேருந்துகள் இயக்கப்படாததாலேயே மாணவர்கள் பேருந்து படியில் பயணிக்கும் நிலை ஏற்படுவதாக கூறி பேருந்தின் முன்பு மாணவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் இருதரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்