கேள்வி கேட்ட இளைஞரை தாக்கிய ஊராட்சி செயலாளர் - தீயாய் பரவும் வீடியோ காட்சிகள்

x

கடலூர் மாவட்டம் தலைக்குளம் கிராமத்தில், குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், ஊராட்சி வரவு செலவு கணக்கு குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி செயலாளர் ராமருக்கும், இளைஞர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராமர், இளைஞரை ஒருவரை தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்