கோவிலுக்குள் விடாமல் அவதூறு பேசிய விவகாரம்... பட்டியலினத்தவர்களுடன் கோயிலுக்குள் வழிபட்ட காம்ரேடுகள்

x

சேலத்தில் பட்டியிலன இளைஞரை அவதூறாக பேசிய விவகாரத்தை தொடர்ந்து, பட்டியலினத்தினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இணைந்து கோயிலில் வழிபாடு செய்தனர்.

சேலம் மாவட்டம், திருமலைகிரி பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவின் போது பட்டியலின இளைஞரை கோயிலுக்குள் விட மறுத்து அவதூறாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதில், இளைஞரை அவதூறாக பேசிய திமுக முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் மாணிக்கம் கட்சியின் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கட்சியினர் இணைந்து பட்டியலின மக்களுடன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.

அனைத்து சமுதாய மக்களும் கோயிலில் வழிபாடு செய்வதை உறுதிப்படுத்தும் விதமாக இந்நிகழ்வு நடைபெற்றது


Next Story

மேலும் செய்திகள்