இந்திய கிரிக்கெட் வீர‌ர் ரோகித் சர்மாவுக்கு கொரோனா | Rohitsharma | Coronapositive | Covid19

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீர‌ர் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா...,
x

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீர‌ர் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலால் தள்ளி வைக்கப்பட்ட ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. வரும் ஜூலை ஒன்றாம் தேதி போட்டி தொடங்க உள்ளது. இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது ரேபிட் ஆண்டிஜென் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால், ரோஹித் சர்மா, ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்