"கொரோனா நடவடிக்கையை தீவிரப்படுத்துங்கள்"... மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.
x

கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் சில மாநிலங்களில் கொரோனா நோய்த் தோற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சுகாதாரத்துறை நிபுணர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் மாவட்டங்களில் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை தீவிரப்படுத்துவது அவசியம் என வலியுறுத்தினார். மேலும் வைரஸ் உருமாற்றம் அடைவதற்கான சாத்தியங்கள் குறித்து மரபணு பகுப்பாய்வில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். நோய் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.
Next Story

மேலும் செய்திகள்