முதல்வர் ஸ்டாலின் குறித்து சர்ச்சை போஸ்டர்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதவியாளர் கைது

x

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள பல்வேறு தெருக்களில், கடந்த 11 ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து பலரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் என்பவரின் தூண்டுதலில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமார் முருகனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்