காளியை தரக்குறைவாக சித்தரித்ததாக சர்ச்சை - இயக்குநர் லீனா மீது இந்து முன்னணியினர் புகார்

x

'காளி' ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிகரெட் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் கொடியை காளிதேவி ஏந்தியிருப்பது போன்று ஆவணப்படத்தின் போஸ்டரை லீனா பகிர்ந்தது சர்ச்சையை உண்டாக்கியது. இந்த நிலையில், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக போஸ்டரை வெளியிட்டதாக லீனா மணிமேலை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் சார்பில் நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்