"பெண் காவலரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் புகார்" - போலீசில் சிக்கிய பாஜக இளைஞரணி தலைவர்

x

கள்ளக்குறிச்சியில் பெண் காவலரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாஜக இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமார். இவரும் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த காவலர் சவீதாவும் கடந்த 3 வருடமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. திடீரென்று கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், ரஞ்சித் சாலையில் நின்று கொண்டிருந்த சவீதாவிடம் முப்பதாயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், தரவில்லையெனில் கொலை செய்துவிடுவேன் என கூறியதாகவும் சவீதா அளித்த புகாரின் அடிப்படையில், பாஜக இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்