காமன்வெல்த் - பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

x

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது, தொடர்பான அவரது சமூக வலைதள பதிவில், பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குச் சிறப்பான தொடக்கம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வலுதூக்கும் வீரர்கள் தங்களது அபார முயற்சிகளால் பதக்கப் பட்டியலில் இந்தியாவைத் தூக்கி நிறுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். தங்கம் வென்ற மீராபாய் சானு, வெள்ளி வென்ற பிந்தியாராணி தேவி, சங்கேத் சர்கர் மற்றும் வெண்கலம் வென்ற குருராஜா ஆகியோருக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்