கோவை சம்பவம்.. என்ஐஏ-வுக்கு பரிந்துரைத்த முதல்வர் ஸ்டாலின் - பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு

x

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை, தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ள நடவடிக்கையை பாஜக வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற சம்பங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தேச விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும், உளவுத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். திமுகவினர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு காவல்துறையினரை பயன்படுத்தாமல், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் எனவும் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்