கேரம் விளையாடிய சிறுவர்கள்..சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்

x

வேலூர் அருகே சேனூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்பழகனின் மகன் துரை சரவணனும், அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் வசீகரனும் கேரம் போர்டு விளையாடி உள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு, தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதில், வசீகரன் தாக்கியதில், துரை சரவணன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசர் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்