கடலின் ஆழப் பகுதியில் சென்று குளிக்கும் குழந்தைகள், பெண்கள்- காரைக்காலில் பரபரப்பு

காரைக்காலில் ஆபத்தை உணராத இளைஞர்கள், கடலின் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்து வருகின்றனர்...
x

காரைக்காலில் கோடை விடுமுறையால் கடற்கரையில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்: ஆபத்தை அறியாமல் கடலின் எல்லை தாண்டி ஆழப் பகுதியில் சென்று குளிக்கும் பெண்கள், குழந்தைகள்,இளைஞர்கள்


தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காரைக்கால் பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகமாக இருநத்த நிலையில் மாலை நேரத்தில் கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

மேலும் தமிழகப் பகுதியான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன் உள்ளூர் வாசிகள் என 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காரைக்கால் கடற்கரையில் குவிந்து வருகின்றனர்.

காரைக்கால் கடற்கரையில் இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கடலில் குளித்து அலையின் சீற்றத்தால் இழுத்துச் செல்லப்பட்டு இறந்துள்ளனர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரே மாதத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் கடலில் குளித்த போது மர்மமான முறையில் இறந்துள்ளனர் இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பாகக் கடலில் குளிக்க வேண்டாம் என்று ஆழப் பகுதிக்குச் செல்லக் கூடாது அறிவுறுத்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வாசிகள் இது குறித்துத் தெரிந்த நிலையில் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதன் குறித்துத் தெரியவில்லை என்பதாலும் மக்கள் கூட்டம் இருந்த நிலையிலும் கடலோர காவல்துறை மற்றும் ரோந்து காவல்துறை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் இல்லாததால் வெளியூர் சுற்றுலா வாசிகள் அச்சத்தின் உணராமல் கடலில் குளித்து மிகவும் ஆழமான பகுதிகளுக்குச் சென்று அதுவும் குழந்தைகள் பெண்கள் என ஏராளமானோர் குளித்து வருகின்றனர்.


மேலும் இளைஞர்கள் மிகவும்ஆழப் பகுதிக்குச் சென்று கடலில் குளித்து சாகசத்தைக் காட்டி வருகிறார்கள் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன்பே மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொண்டு உரியப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூட்டத்தைப் பயன்படுத்திப் பல குற்றங்களைத் தடுக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்