சென்னை சங்கமம் விழா இன்று தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

x

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சென்னை சங்கமம் விழாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னை தீவுத்திடலில், சென்னை சங்கமம் விழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சங்கமம் விழாவை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இருந்தும் 600-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

சென்னையில் (ஜன. 14) நாளை முதல் வரும் 17-ஆம் தேதி வரை, செம்மொழிப்பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட 18 இடங்களில் சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை நகர மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், உணவுத் திருவிழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்