விமான நிலையத்தில் லிஃப்ட் பழுது - பழுதானதால் பயணிகள் அவதி

x

சென்னை விமான நிலையத்தில் லிஃப்ட் பழுதானதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

மீனம்பாக்கம் முனையம் புறப்பாடு பகுதிக்கு செல்ல லிஃப்ட் வசதி உள்ளது. இந்த நிலையில், வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து புறப்பாடு பகுதிக்கு செல்ல பயன்படுத்தும் லிஃப்டில் திடீரென பழுது ஏற்பட்டது.

இதனால், விமானத்தில் அவசரமாக செல்ல காத்திருந்த பயணிகள் 2 மாடி ஏறி சென்றனர். ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு லிஃப்ட் சரி செய்யப்பட்டதால், பயணிகள் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்