நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு - அக்.14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

x

விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் செலுத்தியது.

இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி, கடனை திருப்பி செலுத்தாமல், விஷால் தான் நடித்த வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்துள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென விஷால் கோரி இருந்தார்.

இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லைகா தரப்பு வாதிட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்த நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பின்னர் விசாரிப்பதாக கூறி, வழக்கை தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்