"புற்றுநோய் என்பது ஒரு உயிர்கொல்லி அல்ல"-"நிச்சயம் குணமடைந்து விடலாம்" -புற்றுநோய் மருத்துவர் விஜயராகவன் தகவல்

x

"புற்றுநோய் என்பது ஒரு உயிர்கொல்லி அல்ல"-"நிச்சயம் குணமடைந்து விடலாம்" -புற்றுநோய் மருத்துவர் விஜயராகவன் தகவல்


மனித உடலில் 91 சதவீதம் நீர் சத்தை கடைபிடித்தால் அனைத்து விதமான நோயில் இருந்து தப்பிக்கலாம் என சென்னையின் பிரபல புற்றுநோய் மருத்துவர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் பேடர்சன் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரோஸ் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் புற்றுநோய் சிகிச்சையில் இருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் பங்கேற்றனர். மேலும் புற்று நோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் விஜயராகவன் தலைமையில் சிறப்பு விருந்தினராக நடிகர்கள் எஸ்.வி.சேகர், மதன் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மனித உடலில் உள்ள 91 சதவீதம் நீர் சத்தை தினந்தோறும் கடை பிடித்தால் அனைத்து விதமான நோயிலும் இருந்து தப்பிக்கலாம் என டாக்டர் விஜயராகவன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களது கருத்துக்களை தற்போது பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்